'சிங்கப்பூரின் முதல் ஹலால் சமையல் கற்பிப்புக் கூடம்'

'சிங்கப்பூரின் முதல் ஹலால் சமையல் கற்பிப்புக் கூடம்'

2 mins read
8f3c9f01-7d4b-4720-8192-ee087891450c
-

முஹம்­மது ஃபைரோஸ்

சுவை­மி­குந்த பிரியாணி வகை­களைச் சமைத்து சுவைக்க விரும்­பு­ப­வர்­களுக்கு வாய்ப்பை வழங்­கு­கிறது பிர­சித்­தி­பெற்ற இஸ்லா­மிக் உண­வ­கம். நார்த் பிரிட்ஜ் சாலை, கம்போங் கிளாம் பகு­தி­யில் உண­வ­கத்­தின் அருகில் அதற்­காக ஒரு சிறப்பு சமையல் கற்பிப்புக் கூடத்தை உண­வ­கம் அமைத்­துள்­ளது. "சிங்கப்­பூ­ரின் முதல் 'ஹலால்' சமையல் வகுப்புக் கூடமான இங்கு ஒரே நேரத்­தில் 20 பேர் சமையல் கற்­க­லாம்," என்று கூறினார் இஸ்­லா­மிக் உண­வ­கத்­தின் வர்த்­தக மேம்பாட்டு நிர்வாகி திரு இர்­ஃ­பான் அக்ரம், 27.

1921ல் தொடங்கப்­பட்ட இஸ்­லா­மிக் உண­வ­கத்­தின் நான்கா­வது தலைமுறை உரிமை­யா­ள­ரான திரு கலிலூர் ரஹ்மானுக்கு தமது உணவகத்தின் சிறப்பு பிரியாணி வகைகளை பலருக்கும் சொல்லித் தர வேண்டும் என்ற அவா பல காலமாக இருந்து வந்தது. அதற்காக ஒரு ஹலால் சமையல் நிலை­யத்தை உரு­வாக்­க நினைத்தார். போஸ், கன்­வோ­தம், கென்வுட் போன்ற உள்ளூர் அனைத்­து­லக சமையல் வகுப்பு நிறு­வ­னங்கள் அவரது முயற்சிக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­வந்தன.

2013ன் நடுப்­ப­கு­தி­யில் அமைக்­கப்­பட்ட இந்த அதிநவீன சமையல் கூடத்தின் தனிச் சிறப்பு இறைச்சி, கோழி பிரியாணி சமையல் வகுப்­பு­கள். சமையல் வகுப்­பு­களில் பங்­கு­ பெற முன்­ப­தி­வும் கட்­ட­ணங்களும் உண்டு. உணவு வகைகள் குறித்த ஆய்வு மேம்பாடு, பயிற்­சிப் பட்­டறை­கள், நேர்­கா­ணல்­கள், படப் பி­டிப்பு போன்ற­வற்­றுக்­கும் தளமாக விளங்­கு­கிறது இந்த சமையல் கூடம்.

கம்போங் கிளாம் பகுதியில் அமைந்துள்ள சமையல் வகுப்புக் கூடத்தில் பங்கேற்ற வர்களுக்கு 'இஸ்லாமிக்' உணவகத்தின் பிரபல பிரியாணியை சமைக்கச் சொல்லித் தரும் திருமதி ஹிடாயா பர்வீன்.