எம்ஆர்டி ரயிலில் மானபங்கம்: பொறியாளருக்கு ஏழு மாதச்சிறை

எம்ஆர்டி ரயிலில் மானபங்கம்: பொறியாளருக்கு ஏழு மாதச்சிறை

1 mins read
Google News Preferred Icon

கியா மாயோ தாட் என்ற 33 வயது பொறியாளருக்கு எம்ஆர்டி ரயிலில் 22 வயது பெண்ணை மானபங்கம் செய்த குற்றத்திற்காக ஏழு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தில் இருந்து நகர மண்டப பயணத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. சம்பவ நாளன்று, அந்த பெண் தன் கைப்பையுடன் தன் பயணத்தை பூன் லே நிலையத்தில் தொடங்கியதாகவும் பின்னர் போன விஸ்டா நிலையத்தில் அமர தனக்கு வாய்ப்பு கிட்டியாதவும் அவர் கூறினார். அவர் இடப்புறம் கியா வந்து அமர்ந்தாகவும் அவர் குறிப்பிட்டார். பின்னர் ஆடவரின் கைவிரல்கள் தனது இடது மார்பகத்தைத் தொட்டதை உணர்ந்தார். அடுத்த நிலையத்தில் இறங்கிய அவரை அலுவலகம் வரை கியா பின் தொடர்ந்ததாகவும் மாது சொன்னார். மறுநாள் அந்த மாது போலிஸில் புகார் அளித்தார்.