10 விழுக்காட்டுக்கும் குறைவான புகார்கள்

10 விழுக்காட்டுக்கும் குறைவான புகார்கள்

1 mins read

கடந்த ஐந்தாண்­டு­களில் செய்­யப்­பட்ட வேலை இடம் குறித்த புகார்­களில் இனம், சமயம் தொடர்­பான வேலை பாகுபாடு பற்றிய புகார்­கள் 10 விழுக்­காட்­டுக்­கும் குறைவே என்று மனி­த­வள அமைச்­சுக்­கான துணை அமைச்­சர் டியோ செர் லாக் கூறினார். 2014 முதல் நியாமான வேலை வாய்ப்பு நடை­முறை­களுக்­கான முத்­த­ரப்பு கூட்டணி இதுவரை 10 முத­லா­ளி­களுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. 12 முத­லா­ளி­களைத் தண்­டித்­துள்­ளது. 2011 முதல் 2015 வரை மனி­த­வள அமைச்­சுக்­கும் கூட்­ட­ணிக்­கும் 400க்கும் மேற்­பட்ட புகார்­கள் வந்­துள்­ளன. அதில் இனம், சமயம் சார்ந்த புகார்கள் 10 விழுக்­காட்­டுக்­கும் குறை­வு.

விதி­முறை­களைக் கடைப்­பி­டிக்­காத முத­லா­ளி களுக்கு எதிராக, வெளி­நாட்டு ஊழி­யர்களைப் பணிக்கு சேர்த்­துக்­கொள்­வது தொடர்­பாக கட்­டுப்­பாடு­கள் விதிப்­பது போன்ற கடுமை­யான நட­வ­டிக்கை­ கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்றன என்றார் அமைச்­சர். இந்­ந­ட­வ­டிக்கை­கள் எந்த அள­வுக்கு பயன் அளித்து உள்ளன என்ற மன்ற உறுப்­பி­னர்­களின் கேள்விக்குப் பதில் அளித்த திரு டியோ, தவறு செய்து தண்­டிக்­கப்­பட்ட நிறு­வ­னங்கள் குறித்து அதி­கா­ரி­கள் நடத்­திய சோதனை­களில் அவை மீது மறு­ ப­டி­யும் புகார்­கள் எழ­வில்லை என்று விளக்­கினார்.2016-07-12 06:00:00 +0800