பூன் லே வேய்க்கும் கார்ப்பரேஷன் சாலைக்கும் அருகில் இருக்கும் துணைச் சாலையில் நேற்றுக் காலை திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்தத் தகவலை டுவிட்டர் வழியாக பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்றுக் காலை 10.16 மணிக்கு தெரிவித்தது. வெள்ளத்தால் போக்குவரத்து தடைப்பட்டதாகவும் கழகம் கூறியது. பின்னர் 10.42 மணிக்கு வெள்ளம் வடிந்து விட்டதாக அறிவித்தது. நிலப்பகுதிகளில் சூரிய வெப்பத்தின் அதிகரிப்பால் ஜுலை மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நான்கு முதல் ஆறு நாட்களுக்கு காலை பின்னேரத்திலும் பிற்பகலிலும் மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மழை பெய்தாலும் அன்றாட வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸ்சை எட்டும் என்றும் அது முன்னுரைத்தது.
பூன் லேயில் திடீர் வெள்ளம்
1 mins read

