சிராங்கூன் கார்டனில் உள்ள புகழ்பெற்ற 'சிக்கன் ரைஸ்' கடை ஒன்றுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த உணவுக் கடையில் சாப்பிட்ட 29 பேருக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது தெரியவந்ததை அடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டது. 'போ சிங் ரெஸ்டாரெண்ட்' உணவகத்தின் உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள் ளனர். சுகாதார அமைச்சும் தேசிய சுற்றுப்புற முகவை, வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையமும் இணைந்து நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டன. அந்த அறிக்கையில், அந்த உண வுக் கடையில் சாப்பிட்ட பின்பு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டதாக தங்களுக்குப் புகார் வந்ததையடுத்து அந்தக் கடையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கெட்டுப்போன உணவு: சிக்கன் ரைஸ் கடைக்கு இடைக்காலத் தடை
1 mins read

