படகு தீ விபத்து: ஊழியர் மீட்பு

படகு தீ விபத்து: ஊழியர் மீட்பு

1 mins read

மரினா பே பகுதியிலுள்ள சிங்கப்பூர் ஆற்றில் சென்றுகொண்டு இருந்த 'ரிவர் டாக்சி' என்று அழைக்கப்படும் படகு ஒன்று சென்ற செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது. அப்போது கடலில் குதித்த படகு ஊழியரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருந்தது. அந்த ஊழியரின் உடல் நேற்று முன்தினம் இரவு கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் தளத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப் பட்டதாகவும் எஸ்டிஎஃப் கூறியது. இறந்தவரின் பெயர் திரு ஓங் ஹாங் லாங் என்றும் அவருக்கு வயது 33 என்றும் அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து வருவதாகவும் 'சிங்கப்பூர் ரிவர் குரூஸ்' படகு நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஆண்டுதோறும் தங்கள் படகுகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு படகு இயக்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளதாக மேலும் அவர் கூறினார்.