சிங்கப்பூர் பங்குச் சந்தையில் தொழில்நுட்பக் கோளாறால் நேற்று தடை ஏற்பட்டது. காலை 11.30 மணிக்கு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு 2.00 மீண்டும் பங்குச் சந்தையைத் திறக்க முயற்சி எடுக்கப்பட்டது. அது இயலாத காரணத்தால் மீண்டும் 4.00 மணிக்கு திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதுவும் இயலாததால் நேற்றைய பங்குச் சந்தை மீண்டும் திறக்கப்பட மாட்டாது என்று பங்குச் சந்தை அறிவித்தது. இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மென்பொருள் கோளாறாலும் அதே ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி மின்சாரக் கோளாறாலும் பங்குச் சந்தையில் தடை ஏற்பட்டது.
பங்கு வர்த்தகம் தடைபட்டது
1 mins read

