ஆய்வறிக்கைகள் மீட்பு, பட்டம் பறிப்பு

ஆய்வறிக்கைகள் மீட்பு, பட்டம் பறிப்பு

1 mins read

தகவல் திரிபுகள் காரணமாக சிங்கப்பூர் ஆய்வாளர்களின் பல அறிக்கைகள் மீட்டுக்கொள்ளப் பட்டுள்ளன. ஒரு முனைவர் பட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறை நியமனங்கள் முடித்துக்கொள்ளப்பட்டுள்ளன. தகவல் திரிபுகளில் சிங்கப் பூரின் பல்வேறு நிறுவனங்களின் ஆய்வாளர்களுக்குத் தொடர்பு இருப்பதாக நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைமையில் நடந்த புலன் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. தொடர்புடைய ஆய்வாளர்கள், நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு முகவை (A*Star) ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். பேராசிரியர் ரவி கம்பத்தூர் என்பவர் தலைமையில் அவர்கள் செயல்பட்டனர்.

மனித உடலிலும் விலங்கு உடலிலும் தசை வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் ஒரு புரதம் தொடர்பாக இந்த ஆய்வுக் குழுவினர் நடத்திய ஆய்வுகளின் முடிவில் அந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆய்வில் திரிபுகள் இடம் பெற்றதாகத் தெரியவந்தது. புலன்விசாரணை காரணமாக 2012ல் ஆய்வுக்குழு உறுப்பின ரான லோகிரெட்டி சுதர்சன ரெட்டியின் முனைவர் பட்டம் மீட்டுக்கொள்ளப்பட்டது.