பிரதமர் லீ: இரு துறைகளில் அதிக வளர்ச்சி வாய்ப்புகள்

பிரதமர் லீ: இரு துறைகளில் அதிக வளர்ச்சி வாய்ப்புகள்

1 mins read
fea04221-7916-44a0-82b1-17e62f4bd9a0
-

உலகம் முன் ஒருபோதும் இல்லாத அளவுக்கு இப்பொழுது அதிகமாக பிணைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இரண்டு துறை களில் வளர்ச்சி வாய்ப்புகள் அதிக மாக இருக்கின்றன என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். திரு லீ, மங்கோலியாவில் நடக்கும் 11வது ஆசிய - ஐரோப்பிய உச்சநிலை கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் 51 நாடுகளின் உயர்நிலை தலைவர்கள் பங்கெடுத் துக் கொண்டனர்.

அதில் பிரத்தியேகக் குழுக் கூட்டம் ஒன்றில் திரு லீ உரை யாற்றினார். அப்பொழுது அவர் இவ்வாறு தெரிவித்தார். வளர்ச்சி வாய்ப்பு உள்ள இரண்டு துறை களில் ஒன்று வர்த்தகம் என்று அவர் குறிப்பிட்டார். ஐரோப்பிய தாராள வர்த்தகச் சங்கத்துடன் ஏற்கெனவே தாராள வர்த்தக உடன்பாட்டை சிங்கப்பூர் செய்துகொண்டிருக்கிறது. ஐரோப் பிய ஒன்றியத்துடன் இத்தகைய உடன்பாட்டில் அண்மையில் அது கையெழுத்திட்டது.

இந்த உடன்பாடுகளை இன்னும் பலப்படுத்தி, ஒரு நாள் ஆசிய- ஐரோப்பிய தாராள வர்த் தக உடன்பாட்டில் அங்கம் வகிக் கலாம் என்று சிங்கப்பூர் நம்புவதாக திரு லீ குறிப்பிட்டார். வளர்ச்சிக்கு அதிகம் வாய்ப்பு உள்ள இரண்டாவது துறை விமானப் போக்குவரத்துத் துறை என்று திரு லீ குறிப்பிட்டார். ஐரோப்பாவுக்கும் ஆசியாவிற்கும் இடையில் தாராள ஆகாய உடன்பாடு இருக்கும்பட்சத்தில் அதனால் இரண்டு வட்டாரங்களும் இன்னும் அணுக்கமாகும் என்று திரு லீ தெரிவித்தார்.