இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சிங்கப்பூர் வருகை

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சிங்கப்பூர் வருகை

2 mins read
730ecdbc-5da6-42ad-a043-17ed1617245b
-

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே (படம்) இன்று சிங்கப் பூருக்கு அதிகாரத்துவ வருகை யளிக்கிறார். பிரதமர் லீ சியன் லூங் அழைப்பின் பேரில் வருகை தரும் அவர் செவ்வாய்க்கிழமை வரை இங்கு இருப்பார். இஸ்தானாவில் நாளை திரு ரணிலுக்கு அதிகாரத்துவ வர வேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து அதிபர் டோனி டான் கெங் யாம், பிரதமர் லீ ஆகியோரை அவர் சந்தித்துப் பேசுவார். சிங்கப்பூர், இலங்கைப் பிரதமர்கள் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். அதன் பிறகு பிர தமர் லீ அளிக்கும் பிற் பகல் விருந்தில் திரு ரணில் பங்கேற்பார்.

மூன்றாவது தெற் காசிய புலம் பெயர்ந் தோர் மாநாட்டில் பங் கேற்று சிறப்புரை ஆற் றுவதும் திரு ரணிலின் பயணத் திட்டங்களில் அடங்கும். நாளை நடைபெறும் இம்மாநாட்டை தெற்காசிய கல்வி ஆய்வுக்கழகம் முன்னின்று நடத்து கிறது. நாளை மறு தினம் சிங்கப்பூர் வர்த் தகத் தலைவர்களை திரு ரணில் சந்தித்து உரையாடுவார். ஐஇ சிங்கப்பூர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. கட்டுமானம், துறைமுகம், மரபுடைமை பாதுகாப்பு ஆகியவற்றில் நாட்டம் கொண்டுள்ள இலங்கைப் பிரதமர், அரசாங்கச் சேவை கல்லூரி, சிங் கப்பூர் துறைமுக ஆணையம், சிங் கப்பூர் தேசிய கலைக்கூடம், சிங் கப்பூர் ஆறு ஆகியவற்றுக்குச் செல்வார்.

திரு ரணிலுடன் அவரது துணைவியார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கே, இலங்கை வர்த்தக உத்திகள், அனைத்துலக வர்த்தக அமைச்சர் மாலிக் சமரவிக்ரம, வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, நீதித் துறை துணை அமைச் சர் துஷ்மந்த மித்ரபால ஆகியோ ரும் வருவதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.