நாட்டு வளர்ச்சியில் இளையர்களை ஈடுபடுத்தும் சிங்கப்பூர் இளையர் மாநாடு

நாட்டு வளர்ச்சியில் இளையர்களை ஈடுபடுத்தும் சிங்கப்பூர் இளையர் மாநாடு

1 mins read

நாட்டின் வளர்ச்­சி­யி­லும் மேம்பாட்­டி­லும் இளை­யர்­களை ஈடு­படுத்­தும் நோக்­கத்­து­டன் இளையர் மாநாட்டை ஏற்பாடு செய்­துள்­ளது சிங்கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கத் தமிழ்ப் பேரவை. "இந்த மாநாட்­டில் இளை­யர்­களின் சிந்தனை­களை­யும் அவர்­ க­ளது கருத்­து­களை­யும் தொகுத்து, சமூகத் தலை­வர்­களுக்­கும் அர­சி­யல் தலை­வர்­ களுக்­கும் கொடுக்­க­வுள்­ளோம். இதன்­மூ­லம் வளர்ச்­சியை­யும் மேம்பாட்டை­யும் ஏற்­படுத்த விழை­கி­றோம். இதில் கருத்­து­களைக் கூறு­வ­து­டன் செய­லி­லும் இளை­யர்­களை ஈடு­ப­டச் செய்வது எங்க­ளது இலக்கு," என்று குறிப்­பிட்­டார் சிங்கப்­பூர் இளையர் மாநாட்டு ஏற்­பாட்­டுக் ­கு­ழுத் தலைவர் திரு வி.அருள் ஓஸ்வின்.

மாநாட்டு ஏற்­பாட்­டுக் குழு உறுப்­பி­னர்­கள் 24 பேரும் கடந்த எட்டு மாதங்க­ளா­கப் பலரைச் சந்­தித்து ஆலோ­சனை­களைப் பெற்று மாநாட்டை ஒருங்­கிணைத்­துள்­ ­ள­னர். 'இன்றைய இளை­யர்­களின் கையச்சு; நாளைய தலை­வர்­ களின் பாதச்­சு­வடு' என்ற தலைப்­பில் நாளையும் நாளை மறுநாளும் அடித்­தள அமைப்­பு­கள் மன்றத்­தில் நடைபெற உள்ளது. இரண்டு நாளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடை­பெ­றும் மாநாட்­டில் தலைமைத்­­­து­­­வம், கலை மற்றும் கலா­­­சா­­­ரம், கல்வி, சமூ­க­சேவை ஆகிய நான்கு தலைப்­பு­களில் 20 குழுக்­க­ளாக இளை­யர்­கள் கலந்­துரை­யா­டல்­களை நடத்­த­வுள்­ள­னர்.