முதியவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

முதியவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

1 mins read
d949e4a8-06dd-40f6-8ec4-bdd528e60855
-

கேலாங் லோரோங் 23ல் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக காப்பிக்கடை உதவியாளர் ஒருவரைக் கொலை செய்ததாக நேற்று 64 வயது ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. டோ சியா குவான் என்ற அந்த ஆசாமி, ஜூலை 9ஆம் தேதி காலை 7.30 மணிக்கும் காலை 8 மணிக்கும் இடையில், 52 வயதுள்ள கோங் எங் தியாம் என்பவரின் மரணத்துக்குக் காரணமாக இருந்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. டோ சியா குவான் விசாரணைக்காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். வழக்கு ஜூலை 29 ஆம் தேதி நீதிமன்றத் துக்கு வரும். தாக்கப்பட்டவரின் தலையில் காதில் இருந்து தலை வரை ஆழமான வெட்டுக் காயம் இருந்தது. அவர் கீழே விழுந்துகிடந்த இடத்தில் மரக்கழி ஒன்று கிடந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 64 வயது டோ சியா குவான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்