9,500 பேர் கலந்துகொண்டு ஓடிய 'ஷேப் ரன்'

9,500 பேர் கலந்துகொண்டு ஓடிய 'ஷேப் ரன்'

2 mins read
d04eefda-f30a-42e6-a2dd-cbf7b5edc741
-

'எஸ்­பி­எச் மேக­சின்ஸ்' ஏற்­பாட்­டில் 'ஷேப் ரன்' 11வது ஓட்டப் பந்தய நிகழ்ச்சி நேற்று பே ஃ­பி­ரண்ட்­ பகுதியில் நடை­பெற்­றது. அதில் சிங்கப்­பூ­ரில் முதன்­மு­த­லாக பெண்­களுக்­கான 15 கி.மீ., ஓட்டப் பந்த­யம் வெற்­றிக­ர­மாக நடத்தி முடிக்­கப்­பட்­டது. 'மெர்­ல­யன் பூங்கா', சிங்கப்­பூர் ராட்­டி­னம், கரையோரப் பூங்கா என்று சிங்கப்­பூ­ரின் அழகை ரசித்­துக் கொண்டே ஓடும் வகை­யில் ஓட்­டத்தைத் தொடங்­கும் இட­மும் முடிக்­கும் இட­மும் அமை­யப் பெற்­றி­ருந்தது நிகழ்ச்­சிக்கு சிறப்பு சேர்த்­தது.

2006ஆம் ஆண்டு முதல் ஷேப் சிங்கப்பூர் மேகசின் இந்த ஓட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ஓட்­டத்­தில் 9,500க்கு மேற்­பட்­டோர் பங்­கு­பெற்­ற­னர். 5 கி.மீ., 10 கி.மீ., 1.8 கி.மீ குடும்ப ஓட்டம் என நான்கு வகை­யான ஓட்டப் பந்த­யங்கள் இடம்­பெற்­றன. 15 கி.மீ., ஓட்டத்தில் ஓங் கைஃபென், 10 கி-.மீ, ஓட்டத்தில் விவியன் டேங், 5 கி-.மீ., ஓட்டத்தில் சுஸென்னெ வால்ஷம் ஆகியோர் முதலிடத்தில் வந்தனர். அனைத்து வெற்றியாளர்களும் ரொக்கப் பரிசான $300ஐ தட்டிச் சென்றனர்.

குடும்ப ஓட்­டத்­தில் கண­வன், மனைவி, குழந்தை­கள் என குடும்ப உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் கலந்­து­கொண்ட­னர். 15 கி.மீ., பெண்­களுக்­கான ஓட்­டப்­பந்த­யம் அடுத்த சவா­லான அரை அல்லது முழு மாரத்­தோன் நெட்­டோட்­டத்­தில் கலந்­து­கொள்­வ­தற்கு அவர்களைத் தயார்படுத்­தி­யது. இந்த நிகழ்ச்­சி­யில் பதி­வுக் கட்­ட­ணத்­தின் மூலம் கிடைத்த தொகை யாவும் உடற்­குறை­யுள்ள சிறு­வர்­களுக்கு ஆத­ரவு அளிக்­கும் சமூக சேவை மைய­மான 'லைஃப் கம்­யூ­னிட்டி சர்­வீ­சஸ்' சங்கத்திற்கு அளிக்­கப்­பட்­டது.

கரையோரப் பூந்தோட்டப் பகுதியில் எஸ்பிஎச் நிறுவனத்தின் சஞ்சிகைகள் பிரிவு ஏற்பாடு செய்திருந்த 'ஷேப் ரன்' ஓட்டத்தில் கலந்துகொண்டு ஓடும் மகளிர். படம்: எஸ்பிஎச்