தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிதி நிறுவனங்களுக்கு நாணய ஆணையம் எச்சரிக்கை

1 mins read
b5684115-79ed-43d2-923a-7d7b793ab361
-

நிதி நிறுவனங்களில் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தி, தவறிழைக்கும் நிறு வனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்து உள்ளது. மலேசிய அரசாங்க முதலீட்டு அமைப்பான 1எம்டிபியில் நடந்த தாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவதில் சிங் கப்பூர் வங்கிகளிலும் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஆணையத்தின் நடவடிக்கைகள் கடுமையாகவிருக்கின்றன.

நாணய ஆணையத்தின் வருடாந்திர அறிக்கை வெளியீடு தொடர்பில் நேற்று நடந்த செய்தி யாளர் சந்திப்பில் ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் இதனைத் தெரிவித்தார்.

1எம்டிபி நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பில் நடந்துவரும் விசார ணைகளானது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல், சட்டவிரோத நிதிச் செயல்பாடுகள் போன்ற இடர்களால் உள்ளூர் நிதித் துறை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்ப தற்கான வலுவான நினைவூட்டல் களாக உள்ளன என்று திரு மேனன் சொன்னார். இவை தொடர்பிலான கட்டுப் பாடுகளில் நிலவிய குறைபாடு களுக்காக, கடந்த வாரம் டிபிஎஸ் வங்கியையும் யுபிஎஸ், ஸ்டேண் சார்ட் ஆகிய வங்கிகளின் சிங்கப் பூர்க் கிளைகளையும் நாணய ஆணையம் கடிந்துகொண்டது.

சிங்கப்பூர் நாணய ஆணைய நிர்வாக இயக்குநர் ரவி மேனன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்