விரைவுச்சாலையில் விபத்து; ஆடவர் பலி

1 mins read
33c01dd4-2a5d-41ce-abd1-22d8d4875c42
-

கிராஞ்சி விரைவுச்சாலையில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளும் காரும் மோதிய விபத்தில் 60களில் இருந்த மோட்டார்சைக்கிளோட்டி மரணம் அடைந்தார். தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் அச்சாலையில் பிரிக்லேண்ட் சாலைக்கு வெளி யேறும் வழியை அடுத்து அந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து குறித்து அதிகாலை 5.30 மணிக்குத் தகவல் கிடைத் ததாகவும் உடனடியாக ஒரு தீயணைப்பு வாகனம், ஒரு சிவப்பு ரைனோ வாகனம், மூன்று அவசர மருத்துவ வண்டிகள், ஒரு துணை வாகனம் ஆகியவற்றை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக வும் சிங்கப்பூர்க் குடிமைத் தற் காப்புப் படை கூறியது.

காரின் அடியில் சிக்கிக் கொண்ட மோட்டார்சைக்கிளோட் டியை குடிமைத் தற்காப்புப் படையினர் நீர்ம அழுத்த சாத னங்களின் துணைகொண்டு மீட் டனர். அந்த ஆடவரைப் பரிசோ தித்த துணை மருத்துவப் படை யினர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய 20 வயது களில் இருந்த ஓர் ஆடவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனைக்கும் 40களில் இருந்த மற்றோர் ஆடவர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

காருக்கு அடியில் சிக்கியிருந்த மோட்டார்சைக்கிளோட்டியின் உடலை சாதனங்களின் துணைகொண்டுதான் குடிமைத் தற்காப்புப் படையினரால் மீட்க முடிந்தது. படம்: டுவிட்டர்