வீட்டு அடைமான சாட்சி பத்திரத்தில் பொய்யாக சாட்சி வழங்கிய குற்றத்திற்காக 55 வயது வழக்கறிஞர் கந்தசாமி ராஜேந்திரனுக்கு $6,000 அபராதம் நேற்று விதிக்கப்பட்டது. இந்தக் குற்றத்தை அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் -புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தனியார் வீடு அடைமானத்திற்காக 'யுனைடெட் ஓவர்சீஸ்' வங்கி அவரையும் அவரது நிறுவனத்தையும் நியமித்து அவருக்கு இரண்டு கடிதங்களை வழங்கியது. உடமை மாற்றுப் பத்திரங்களைத் தயார்படுத்தும்படியும் வங்கி ராஜேந்திரனுக்கு கட்டளையிட்டது.
தனியார் வீட்டின் உரிமையாளரின் ஒப்புதல் கையெழுத்தை பார்வையிடாமலே அவர் பத்திரங்களைத் தயார்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நிலப்பட்டா சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் முதல் நபர் ராஜேந்திரன் என்று தெரிவிக்கப்பட்டது.

