மருத்துவம், பல் மருத்துவம் பயில புதிய உபகாரச்சம்பளங்கள்

மருத்துவம், பல் மருத்துவம் பயில புதிய உபகாரச்சம்பளங்கள்

1 mins read

வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் மருத்துவம், பல் மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் இரண்டு புதிய உபகாரச்சம்பளங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசாங்கச் சேவை ஆணையமும் சுகாதார அமைச்சும் இந்த உபகாரச் சம்பளங்களைத் தற்போது உள்ளூர் பல்கலைக்கழகங்களான தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், 'டுயுக்- என்யூஎஸ்' மருத்துவப் பள்ளியில் ஒராண்டுக்கு மேலாக மருத்துவத்துறை பல் மருத்துவத்துறை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வழங்கவிருக்கிறது.

சிங்கப்பூரர்கள், குடியுரிமை எடுக்க விரும்பும் நிரந்தவாசிகள் இந்த உபகாரச்சம்பளத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆறு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் சேவையாற்ற வேண்டும். இவ்வாண்டு செப்டம்பர் தொடக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை விருப்பம் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். இந்த உபகாரச்சம்பளங்கள் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், நேற்று நடைபெற்ற சுகாதார உபகாரச்சம்பள விருது நிகழ்ச்சியில் அறிவித்தார்.