பொங்கோல் பாயிண்ட் படகுத்துறை அருகே ஞாயிற்றுக் கிழமை காலை சுமார் 7.05 மணிக்கு சிங்கப்பூர் துணிகரச் செயல் பள்ளியின் படகு ஒன்றும் சிறு மீன்பிடிப் படகு ஒன்றும் மோதிக்கொண்டதில் அந்த மீன்பிடிப் படகின் ஓட்டுநர் தண்ணீரில் விழுந்துவிட்டார். அவரை அந்தப் பள்ளிக்கூட ஊழியர்கள் மீட்டனர். முதலுதவி அளிக்கப்பட்டது. மருத்துவ வண்டி அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றது. காயம் அடைந்த அவருக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாக தேசிய இளையர் மன்றமும் அதன் ஒரு பிரிவான இந்தப் பள்ளிக்கூடமும் தெரிவித்தன. மேல் விவரங்களை மன்றம் தெரிவிக்க வில்லை என்று சேனல் நியூஸ் ஏஷியா குறிப்பிட்டது.
படகு விபத்தில் படகோட்டி காயம்
1 mins read

