ஓர் ஆண்டில் புகையிலை விற்பனையில் மாற்றம்

ஓர் ஆண்டில் புகையிலை விற்பனையில் மாற்றம்

1 mins read

சிகரெட், பீடி போன்ற புகையிலைப் பொருட்களை வெளிப்படையாகக் கடைகளில் காட்சிக்கு வைக்கும் தடை 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நடப்புக்கு வரும். சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் நேற்று இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டது. இவ்வாண்டு மார்ச் மாதம் இந்த புதிய சட்டம் நாடாளு மன்றத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டது. சிங்கப்பூரர்களிடையே, குறிப்பாக இளையர்களிடையே, புகை பிடிக்கும் பழக்கத்தைக் குறைத்து பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று.

புகையிலைப் பொருட்களை விற்பவர்கள் புதிய சட்டத்தின்கீழ் அப்பொருட்களை சாதாரண அலங்காரம் இல்லாத பேழைகளில் வாடிக்கையாளர்களின் நேரடி பார்வையில் இல்லாத வகையில் வைக்கவேண்டும். இந்த மாற்றம் ஏற்கெனவே புகைப்பிடிப்பவர் களும் புகைப்பிடிக்காதவர்களும் அப்பழக்கத்தைப் பின்பற்றாமல் இருக்க ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.