இவ்வாண்டின் தேசிய தினத்தை குடியிருப்புப் பேட்டைகளில் கொண்டாட, 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை குடியிருப்பாளர்கள் முன்மொழிந்துள்ளனர். மக்கள் கழகத்தின் இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டங்களில் "வேற்றுமையில் ஒற்றுமை" எனும் கருப்பொருளை ஒட்டி நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆகஸ்ட் மாதம் முழுவதும் நடைபெறும்
இந்நிகழ்ச்சிகளில் 300,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்வார்கள் என மக்கள் கழகம் எதிர்பார்க்கிறது. நிகழ்ச்சிகளில் ஒன்றாக, முதன் முதலாக இளையர்கள் வழிநடத்தும் சமூக நடை ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்படும். தேசிய தினமான ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று காலை இளம் தொண்டூழியர்கள் கிட்டத்தட்ட 100,000 குடியிருப்பாளர்களை ஒன்றுதிரட்டி சிங்கப்பூர் முழுவதும் 70க்கும் மேற்பட்ட இடங்களில் மெதுநடையில் ஈடுபடுவார்கள்.

