அமெரிக்காவுக்கு 6 நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் பிரதமர் லீ

அமெரிக்காவுக்கு 6 நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் பிரதமர் லீ

2 mins read
ff7b605e-437d-49d0-9438-8de2f6586ba0
-

பிரதமர் லீ சியன் லூங் ஆறு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு நாளை 31ஆம் தேதி அமெரிக்காவுக்குப் புறப்படுவார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அழைப்பை ஏற்றுச் செல்லும் திரு லீ, இன்று முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை அங்கிருப்பார். சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அணுக்கமான, நீண்டகால உறவை மறுவுறுதிப்படுத்தும் நோக்கத்தில் அமையும் இப்பயணம், இரு நாடுகளுக்கிடையி லான அரசதந்திர உறவின் 50 ஆண்டு நிறைவையும் குறிக்கிறது. மேலும் 1985ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரின் பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு மேற்கொள்ளும் அதிகாரத்துவ பயணமாகவும் இது திகழ்கிறது.

அதிபர் ஒபாமா வா‌ஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை தெற்கு புல்வெளியில் பிரதமர் லீயை வரவேற்பார். பின்னர் ஓவல் அலுவலகத்தில் அவர்களின் சந்திப்புரையாடல் நடைபெறும். பின்னர் அதிபர் ஒபாமா தம்பதிகள், பிரதமர் லீக்கும் திருமதி லீக்கும் அரசுபூர்வ இரவு விருந்தளித்து சிறப்பிப்பார்கள். அடுத்த நாள் துணை அதிபர் ஜோ பைடன் தம்பதிகள், வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ஆகியோர் அமெரிக்க வெளியுறவு அமைச்சில் பிரதமர் லீ தம்பதிக ளுக்குப் பகல் விருந்தளிப்பார்கள்.

அடுத்தடுத்த நாட்களில் தற்காப்பு அமைச்சர் எஷ்டன் கார்ட்டர், நிதி அமைச்சர் ஜேக்கப் லியு, வர்த்தக அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கர், மத்திய புலனாய்வுப் பிரிவு தலைவர் ஜான் ப்ரெனன் ஆகியோருடன் பிரதமர் லீ பேச்சு நடத்து வார். வா‌ஷிங்டனில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் நடை பெறும் தேசிய தின உபசரிப்பில் திரு லீ, அமெரிக்காவில் வாழும் சிங்கப்பூரர்களைச் சந்திப்பார்.

பிரதமர் தம்பதிகளுடன் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், அவரது துணைவியார், வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ். ஈஸ்வரன், பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங், தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங், நாடாளுமன்ற உறுப் பினர்கள் கிறிஸ்டஃபர் டிசூசா, ரஹாயு மஹ்ஸாம், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சியா யோங் யோங் ஆகியோரும் செல்கின்றனர். பிரதமர் லீ அமெரிக்காவிலிருந்து திரும்பி வரும்வரை துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் தற்காலிக பிரதமராகப் பொறுப்பு வகிப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.