கும்பலாக பலாத்காரம் செய்த ஐவரில் 2 இளையருக்கு சிறை, பிரம்படி

கும்பலாக பலாத்காரம் செய்த ஐவரில் 2 இளையருக்கு சிறை, பிரம்படி

1 mins read

ஹோட்டல் அறையில் 18 வயது பெண்ணைக் கும்பலாக பலாத்காரம் செய்த ஐந்து இளையர்களில் இருவர் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இச்சம்பவம் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்தது. அப்போது அந்த பெண்ணுக்கு மது ஊற்றி மயக்கமுறச் செய்த 20 வயது முகம்மது ஃபட்லி அப்துல் வஹாப்புக்கு 13 ஆண்டுகள் சிறையும் எட்டு பிரம்படிகளும் தண்டனையாகக் கொடுக்கப்பட்டன. ஃபட்லி அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்த பின்னர் 23 வயது முகம்மது ஹஸ்லி முகம்மது ஹலிமியும் அவரை மானபங்கம் செய்தான். அதற்காக அவனுக்கு 11 ஆண்டுகள் சிறையும் ஆறு பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மேலும் மூவரின் வழக்கு அடுத்த வாரம் தொடங்கும்.