போலிசில் பொய்ப் புகார்; இளைஞரிடம் விசாரணை

போலிசில் பொய்ப் புகார்; இளைஞரிடம் விசாரணை

1 mins read

இன்னாரென்று தெரியாத இரண்டு பேர் தன்னைத் தாக்கி தன்னிடமிருந்து $60 பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்ட தாக ஒரு 18 வயது இளைஞர் போலிசில் பொய்ப் புகார் செய் திருக்கிறார் என்ற சந்தேகத் தின் பேரில் அந்த இளைஞரைப் போலிஸ் விசாரித்து வருகிறது. அந்த இளைஞர் கடந்த வியாழக்கிழமை பாய லேபார் அக்கம்பக்க போலிஸ் சாவடியில் ஒரு புகார் செய்தார். கேன்பெரா ரோட்டில் இருக்கும் புளோக் 351பி=க்கு அருகே உள்ள உடலு றுதி முகப்பு ஒன்றில் கொள் ளைச் சம்பவம் நிகழ்ந்ததாக புகாரில் அவர் குறிப்பிட்டு இருக் கிறார்.

அதுபற்றி விசாரித்தபோது அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பலவற்றையும் தெரிவித் தார். அவர் போலிசில் பொய் புகார் தெரிவித்திருக்கிறார் என்பது விசாரணையின் மூலம் தெரியவந்தது. அந்த இளைஞர் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாகப் போலிஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. அரசாங்க ஊழியரிடம் யாராவது பொய்யாகப் புகார் செய்தால் அவருக்கு கடும் தண்டனை உண்டு என்பதை போலிஸ் நினைவுபடுத்தியது.