அணிவகுப்புக்கு அதிக பாதுகாப்பு

அணிவகுப்புக்கு அதிக பாதுகாப்பு

1 mins read

உலகம் முழுவதும் பயங்கரவாத மிரட்டல் அதிகரித்து இருப்பதைக் கருத்தில்கொண்டு, சிங்கப்பூரில் இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்புக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. தேசிய தின அணிவகுப்பு முன்னோட்ட நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் கலந்துகொண்ட தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். ஆகஸ்ட் 9ஆம் தேதி அணிவகுப்பின்போது பாதுகாப்பு பரிசோதனையைக் கடந்து அரங்கின் உள்ளே செல்லவேண்டி இருக்கும் என்பதால் முன்னதாகவே வரும்படி பார்வை யாளர்களை போலிஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது.

சனிக்கிழமை நடந்த தேசிய நாள் அணிவகுப்பு இரண்டாவது, கடைசி ஒத்திகையின்போதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. ஒத்திகையின்போது பார்வையாளர்கள் மின்னணுச் சோதனைவழிகளைத் தாண்டி செல்லவேண்டிய நிலை இருந்தது. அவர்களின் பைகளும் சோதிக்கப்பட்டன. சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரையில் இத்தகைய பாதுகாப்புச் சோதனைகளை அவர்கள் தங்கள் வாழ்வில் பொறுத்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், ஆனால் சிங்கப்பூரர் களின் அன்றாட வாழ்வைச் சீர்குலைக்க பயங்கரவாதிகளை அனுமதித்துவிடக்கூடாது என்று குறிப்பிட்டார். இந்த ஆண்டு அணிவகுப்பு 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காலாங்கில் நடக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தேசிய தினத்தை தேசிய விளையாட்டு அரங்கில் கொண்டாடி மகிழும்படி சிங்கப்பூரர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.