பிரதமர் லீ சியன் லூங்கும் திருமதி லீயும் அமெரிக்காவின் வாஷிங்டன், டிசி நகரில் நேற்று 500க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர் களுடன் தேசிய நாளை முன்ன தாகவே கொண்டாடினர். திரு லீ, கொண்டாட்டம் தொடங்கியதற்கு முன்னதாக சிங் கப்பூரரிடையே உரையாற்றினார். "நாட்டு உருவாக்கத்தில் நாம் ஒன்றாகச் சேர்ந்து 50 ஆண்டு களைக் கழித்திருக்கிறோம். அடுத்த 50 ஆண்டு பயணத்தை இப்பொழுது நாம் தொடங்கியிருக் கிறோம். இதை வைத்துப்பார்க் கையில் நாம் கொண்டாடி மகிழ் வதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன," என்று திரு லீ தனது உரையில் குறிப்பிட்டார். பிரதமர் லீ அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற் கொண்டிருக்கிறார். சிங்கப்பூர் பிரதமருக்கு அமெரிக்க அதிபர் செவ்வாய்க் கிழமை (சிங்கப்பூர் நேரப்படி புதன் கிழமை காலை) வெள்ளை மாளி கையில் விருந்தளித்துச் சிறப்பிக் கிறார். சிங்கப்பூரர்களுடன் பிரதமர் தேசிய நாள் கொண்டாடிய நிகழ்ச் சியில் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ். ஈஸ் வரன், பிரதமர் அலுவலக அமைச் சர் சான் சுன் சிங், தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்களும் நாடா ளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பின்னணியில் தேசிய தின பாடல்கள் ஒலிக்க, பலரும் கோழிச் சோறு, சாத்தே, மீ சியாம் போன்ற சிங்கப்பூருக்கே உரிய உணவு வகைகளைச் சுவைத்தனர். திருவாட்டிச் சால்வா சலிம் பெர்ரே, 32, என்பவர் அமெரிக்கா விற்கு இரு மாதங்களுக்கு முன் சென்ற சிங்கப்பூர் தொழிலதிபர். "இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதைச் சிறப்பாக கருதுகிறேன். சுற்றிலும் இருப்போர் 'சிங்லிஷ்' மொழியில் பேசுவதைக் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தாயகத்துடன் மீண்டும் தொடர்பு கொண்ட உணர்வு எனக்கு வரு கிறது," என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையே, அமெரிக்க பயணம் மேற்கொண்டிருக்கும் பிர தமர் லீ, வாஷிங்டன் நகரில் வர 'பிளேர் ஹவுஸ்' என்ற அமெரிக்க அதிபரின் விருந்தினர் மாளிகை யில் தங்கியிருக்கிறார். பிரதமர் லீ ஆகஸ்ட் 5 வரை அங்கு தங்கியிருப்பார். அந்த விருந்தினர் மாளிகை நான்கு கட்டடங்கள் சேர்ந்த ஒரு வளாகம் ஆகும். கடந்த 1950 களுக்கும் 1980களுக்கும் இடை யில் இடம்பெற்ற புதுப்பிப்புகளைத் தொடர்ந்து அந்தக் கட்டடங்கள் ஒரே கட்டடமாகக் கட்டப்பட்டன. பென்சில்வேனியா அவென்யூ வும் ஜாக்சன் பிளேசும் சந்திக்கும் இடத்தில் அது அமைந்துள்ளது. அதில் 119 அறைகள் இருக் கின்றன. 14 படுக்கை அறைகள், 35 குளியல் அறைகள் அதில் உண்டு. அதன் தரைப்பரப்புக் கிட் டத்தட்ட 70,000 சதுர அடியாகும். அது வெள்ளை மாளிகையைவிட பெரியது. அமெரிக்காவின் அதி பரும் துணை அதிபரும் பயன் படுத்துவதற்காக அமெரிக்க அர சாங்கத்திற்குச் சொந்தமான பல குடியிருப்பு இடங்கள் உள்ளன. அவற்றில் பிளேர் ஹவுஸ் ஒன்று. வெள்ளை மாளிகை, கேம்ப் டேவிட் ஆகியவை இதர பலவற்றில் அடங்கும். வெள்ளை மாளிகை யைப் போல் அல்லாது பிளேர் ஹவுஸ் பொதுமக்களுக்கு மூடப் பட்டிருக்கிறது. பிளேர் ஹவுஸில் அமெரிக்க அதிபரின் முக்கியமான பிரமுகர்களும் விருந்தினர்களும் மட்டுமே தங்க முடியும் என்பதால் அது உலகின் மிக உயர்வான ஹோட்டல் என வர்ணிக்கப்படும். ஜப்பானின் பேரரசர் அக்கி ஹிட்டோ, எலிசபெத் II மகாராணி யார், ரஷ்ய அதிபர் புட்டின், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் தாட்சர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பிளேர் ஹவுஸ் விருந்தினர்களில் அடங்குவர். சிங்கப்பூர் தலைவர்கள் பலரும் அங்கு தங்கியிருக்கிறார்கள். திரு லீ குவான் இயூ, அங்கு நான்கு முறை தங்கியிருக்கிறார். திரு கோ சோக் டோங் ஒரு தடவையும் பிரதமர் லீ 2013ல் ஒரு தடவையும் அங்கு தங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் சிங்கப்பூர் தேசிய தினக் கொண்டாட்டம்
3 mins read
-

