அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு அரசுப்பூர்வ இரவு விருந்து அளிக்கப்பட்டது. -விருந்தில் பங்கேற்ற அதிபர் ஒபாமாவும் பிரதமர் லீயும் இரு நாடுகளின் சாதனைகளையும் வலுவான உறவுகளையும் பற்றி பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். அமெரிக்காவின் சுறுசுறுப்பாற் றலையும் சுய மாற்றத் திறனையும் சிங்கப்பூர் போற்றிப் புகழ்வதாக திரு லீ இந்நிகழ்வில் தெரிவித் தார். "இத்தகு திறன்கள் மூலமே அமெரிக்கா சிறப்பானதாகவும் ஒளிமயமானதாகவும் உலக நாடு களால் ஈர்க்கப்படுகிறது.
"அமெரிக்காவில் பயிலும் ஆயிரக்கணக்கான சிங்கப்பூரர் கள் உன்னதமான கல்வித் தன்மையால் மட்டும் ஈர்க்கப்பட வில்லை, கல்விக்கூடங்களின் தனிச்சிறப்பு மிக்க செயலாற்ற லும் சமூகத்தின் மனிதப் பண்பு களாலும் அவர்கள் கவரப்படு கின்றனர்," என்றார் பிரதமர் லீ. சிங்கப்பூர் விளையாட்டு முதல் கல்வி வரையில் விரிவான வகையில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை நாடுகிறது என்றும் அமெரிக்காவின் வெளிப்படைத் தன்மையை சிங்கப்பூர் பாராட்டு கிறது என்றும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
ஆசிய நாடுகளால் தற்போது வரவேற்கப்படும் நிலைமையில் உள்ள அமெரிக்கா இந்த வட் டாரத்தில் நீடித்து நிலைக்கும் என்றும் திரு லீ கூறினார். இந்த நிகழ்வின்போது அதிபர் ஒபாமா பெயரிலும் அவரது துணைவியார் மிச்சல் ஒபாமா பெயரிலும் ஆர்கிட் மலர்களை பிரதமர் அறிவித்தார். "நமது ஐம்பது ஆண்டுகால உறவைக் குறிக்கும் வகையில் அதிபரையும் திருவாட்டி ஒபா மாவையும் கௌரவிக்கும் வித மாக ஆர்கிட் மலர்களுக்கு அவர் களின் பெயரைச் சூட்டி சிங்கப்பூர் மகிழ்கிறது," என்று திரு லீ குறிப்பிட்டார். திரு ஒபாமா தமது உரையில் சிங்கப்பூரர்களின் உணவுமுறை பற்றிப் பேசினார்.
"சிங்கப்பூரர்கள் உணவை மிகவும் நேசிப்பவர்கள் என்பதை நாம் அறிவோம். தெருக் கடைக் காரர்களும் உணவு நிலையங்க ளும்கூட விருதுகளைப் பெறுகின் றன. அதனால் உங்களுக்கு உணவைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்தோம்," என்றார் திரு ஒபாமா. சிங்கப்பூரும் அமெரிக்காவும் ஒரு வரலாறாக, குடும்பமாக, தோழமையாக ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்றும் அதிபர் உரைத்தார். "முன்னேறும் சிங்கப் பூர். மாஜுலா சிங்கப்பூர். முன்னே றும் அமெரிக்கா," என்று திரு ஒபாமா ஒரு கோப்பையை பிரதமர் லீயுடன் உயர்த்தி முழங்கினார். இதற்கிடையே, வெள்ளை மாளிகை நிகழ்வுகளை இன்-ஸ்டா கிராம் வாயிலாக பிரதமர் லீ பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். தாம் தங்கியுள்ள அதிபரின் விருந்தினர் மாளிகை யான பிளேர் ஹவுஸின் முதன்மை அறையில் ஒரு சோபாவில் உட் கார்ந்திருக்கும் படத்தை சிங்கப் பூர் நேரப்படி நேற்றுக் காலை அவர் முதன்முதலாக இன்ஸ்டா கிராமில் பதிவேற்றினார்.
வெள்ளை மாளிகை விருந்து நிகழ்வின்போது அதிபர் ஒபாமா தம்பதியருடன் பிரதமர் லீ சியன் லூங் தம்பதியினர். படம்: ஏஎஃப்பி

