'சிபிஎஃப் லைஃப் பிளான்' அறிமுகம் செய்ய உத்தேசம்

'சிபிஎஃப் லைஃப் பிளான்' அறிமுகம் செய்ய உத்தேசம்

2 mins read

மத்திய சேம நிதி உறுப்பினர்கள் தங்களுக்கு மாதந்தோறும் வரும் தொகையை காலப்போக்கில் அதிகரித்துக்கொள்ளும் வித மாக புதிய ஆண்டுத் தொகை திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள் ளது. இந்தப் புதிய மசே நிதி ஓய்வுக் காலத் திட்டம் சிங்கப் பூரர்கள் தங்களது வயதான காலத்தில் வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க உதவும் என்று சொல்லப்படுகிறது. சிபிஎஃப் லைஃப் பிளான் என்னும் அந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய சேம நிதி ஆலோசனைக் குழு உத் தேசித்து உள்ளது.

மாதாமாதம் ஒரு தொகையைப் பெறுவதற்கு அந்தத் திட்டம் வழி செய்யும். அந்தத் தொகை ஒவ்வோர் ஆண்டும் 2 விழுக் காடு கூடிக்கொண்டே போகும். இவ்வாறு எதிர்காலத்தில் உயர்ந்துகொண்டு செல்லக் கூடிய புதிய தேசிய ஆண்டுத் தொகைத் திட்டத்திற்குத் தெரிவு செய்வோர் தற்போது நடப்பில் உள்ள திட்டத்தோடு ஒப்பிடுகை யில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு குறைவான தொகையை அத் திட்டத்தின் தொடக்கக் காலத் தில் பெறுவர்.

தற்போதைய மத்திய சேம நிதி நிரந்தரத் திட்டத்தின் கீழ் 80,500 வெள்ளியை அடிப்படை ஓய்வுக்காலத் தொகையாக தமது 55ஆவது வயதில் கொண்டு உள்ள ஓர் உறுப்பினர் தமது எஞ்சிய காலப் பகுதியில் மாதந்தோறும் 720 வெள்ளியை 65வது வயதிலிருந்து பெறுவார். புதிய திட்டத்தை அவர் தெரிவு செய்தால் தொடக்கத்தில் அவர் 560 வெள்ளியைப் பெறுவார்.

இருப்பினும், இந்தத் தொகை ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போகும். அவருக்கு வயது 75 ஆகும் போது அவர் பெறக்கூடிய மாதத் தொகை $680 வெள்ளிக்கு உயரும். தொடர்ந்து அவருக்கு 87 வயது ஆகும்போது அவரது மாதத் தொகை 860 வெள்ளி யாக வளரும். வயது முதிர்ந்த பருவத்தில் வாழும்போது உயரக்கூடிய வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிப்பது எப்படி என்று கவலைப்படுவோரை மையமாக வைத்து இந்தத் திட்டம் தீட்டப் பட்டுள்ளதாக ஆலோசனைக் குழுத் தலைவர் பேராசிரியர் டான் சோர் சுவான் தெரிவித்தார். ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதோடு மாற்றங் களை நடைமுறைப்படுத்தி உள் ளது.