அல்ஜுனிட் கிரசெண்டில் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி நடந்த கொள்ளைச் சம்பவத்தின் தொடர்பில் வேறு இரண்டு சந்தேக நபர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய போலிசின் உதவியுடன் பிடிபட்ட அவர்கள் நேற்று முன்தினம் சிங்கப்பூரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 29, 30 ஆகிய வயதுகளில் இருக்கும் அவ்விரு ஆடவரும் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப் படுவர்.
அல்ஜுனிட் கிரசெண்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் மாமனாரின் நாணயமாற்று நிறுவனத்தில் பணிபுரிந்த 37 வயதான திரு அலி யூசுஃப் சாயுபுவிடம் இருந்து $620,000 மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப் பட்டது. கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரில் மூவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. சென்ற ஏப்ரல் மாதத்தில் நான்காவது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

