போலி நகையை அடமானம் வைத்தவருக்கு 10 மாதச் சிறை

போலி நகையை அடமானம் வைத்தவருக்கு 10 மாதச் சிறை

1 mins read

அடகுக் கடைகளில் போலி நகையை தங்க நகை என்று கூறி அடமானம் வைத்து ஏமாற்றி $17,420 மோசடி செய்தவருக்கு நேற்று 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. இவ்வாண்டு மார்ச் மாதத்தில் பான் ஜூ அடகுக் கடை, ‌ஷிங் ஹெங் (கிழக்கு), லூன் ‌ஷிங் அடகுக் கடை ஆகியவற்றை 34 வயதான முகமது நூர் ஃபாட்லி ரோஸ்லி யுடன் சேர்ந்து ஏமாற்றிச் சதி செய்ததற்காக 56 வயது சாஜி ஹுசியாடிக்கு நேற்று தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பின்போது மேலும் மூன்று குற்றச்சாட்டுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. தங்க நகைகளைச் சிறு துண்டுகளாக்கி அவற்றுடன் போலிநகைத் துண்டுகளைச் சேர்த்து இணைத்து அடகுக் கடைகளில் அடமானம் வைக்கும் மோசடித் திட்டத்தைச் செயல்படுத்த ஃபாட்லிக்கு சஜி உதவி அடகுக் கடைகளில் அடமானம் வைத்ததை ஒப்புக்கொண்டார். பான் ஜூ அடகுக்கடையில் நகை சோதித்துப் பார்க்கப்பட்டபோது சதி வெளிச்சத்துக்கு வந்தது. போதைப்பொருள் வைத்திருந்த சஜிக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம். இந்த மோசடியின் மூளையாகச் செயல்பட்ட ஃபாட்லி மீதான வழக்கு, வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் நிலையை அடைந்துள்ளது.