துவாஸ் சோதனைச் சாவடியில் இரண்டு கூடாரங்கள் விழுந்ததால் நேற்றுக் காலை ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் வழியில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று அதிகாலை 5.35 மணியளவில் நேர்ந்த விபத்து குறித்து குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் வாகனமோட்டி களுக்கு எச்சரிக்கை விடுத் திருந்தது. துவாஸ் சோதனைச் சாவடியைத் தவிர்க்குமாறு ஆலோசனையையும் அது வழங்கியது.
காலை 10 மணியளவில் வெளியிட்ட தகவலில் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்புக் கோரிய ஆணையம், பலத்த காற்று, கனமழை காரணமாக கூடாரம் விழுந்ததாகக் குறிப் பிட்டது. "போக்குவரத்து நிலவரம் படிப்படியாக சீரடைந்து வருவதாகவும் கீழே விழுந்த கூடாரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள் ளப்பட்டிருப்பதாகவும் ஆணை யம் தனது அறிக்கையில் தெரிவித்தது. கூடாரங்கள் விழுந்ததில் மலேசிய மோட்டார்சைக்கிளோட்டி ஒருவரும் அவரது வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரும் காயம் அடைந்ததால் அவர்கள் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
நெரிசலில் சிக்கிய பயணிகள் தங்கள் 'ஃபேஸ்புக்' பக்கங்களில் படங்களைப் பதிவேற்றியதுடன் மோசமான காலநிலை விபத்துக்குக் காரணம் எனவும் குறிப்பிட் டிருந்தனர். இணையப்பக்கங்கள் வழியாக போக்குவரத்து நிலவரத்தை அறிந்து பயணத்தைத் தொடங்கு மாறு ஆணையம் வாகனமோட்டி களுக்கு அறிவுறுத்தியது. இடிந்து விழுந்த கூடாரங்களின் பாகங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும் நடைமுறை சீரடைந்திருப்பதாகவும் ஆணையம் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் தெரிவித்தது.
பலத்த காற்று, கனமழை காரணமாக நேற்று காலை துவாஸ் சோதனைச்சாவடியில் இரண்டு கூடாரங்கள் விழுந்தன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படம்: சுதென் ஷெமுவேலின் ஃபேஸ்புக் பக்கம் 2016-08-04 05:52:00 +0800

