மனித மூல உயிரணுவிலிருந்து மூளை நரம்பணுக்கள் உருவாக்கம்

மனித மூல உயிரணுவிலிருந்து மூளை நரம்பணுக்கள் உருவாக்கம்

1 mins read

மனி­தர்­களின் 'ஸ்டெம் செல்' எனப்­படும் மூல உயி­ர­ணுக்­களி­ல் இ­ருந்து மூளையில் இருக்கக் கூடிய 'நியூரான்' எனப்­படும் நரம்ப­ணுக்­களை அதிக எண்­ணிக்கை­யில் உரு­வாக்­கும் புதிய வழி­முறையை உள்ளூர் ஆய்­வா­ளர்­கள் கண்­டு ­பி­டித்­துள்­ள­னர். அதிக எண்­ணிக்கை­யி­லான நரம்ப­ணுக்­களை மிகுந்த செயல்­ தி­ற­னு­டன் உரு­வாக்க முடி­வ­தால் 'ஆட்­டி­சம்' எனப்­படும் மன இறுக்­கம், 'ஸ்கிட்சோஃப்ரீ­னியா' எனப்­படும் முரண்மூளை நோய் போன்ற நரம்­பி­யல் பிரச்­சினை­கள், மனநலப் பிரச்­சினை­கள் போன்ற­வற்­றிற்­கான மருந்­து­களைக் கண்ட­றி­யும் ஆராய்ச்­சி­யில் அவை பயன்­படுத்­தப்­படும்.

'டியூக் என்­யு­எஸ்' மருத்­து­வப் பள்ளி, ஏ=ஸ்டாரின் சிங்கப்­பூர் மர­ப­ணுக் கழகம், தேசிய நரம்­பி­யல் கழகம் ஆகி­ய­வற்றைச் சேர்ந்த மருத்­து­வர்­கள் 'காபார்­ஜிக் (ஜிஎன்)' எனப்­படும் ஒருவகை நரம்ப­ணுக்­களை உற்­பத்தி செய் யும் முறையை உரு­வாக்­கி­ உள்­ள­னர். மூளையில் 'ஜிஎன்' உரு­வாக்­கத்­தில் தொடர்­புடைய மர­ப­ணுக் கார­ணி­களைக் கண்ட­றிந்து பல­வி­த­மான மாறு­பட்ட கார­ணி­களை ஒன்­றிணைத்து ஆராய்ந்து மனித செயல்­பாட்­டுக்­கான 'ஜிஎன்'களை ஆய்­வா­ளர்­கள் உரு­வாக்­கினர்.