ஜூரோங் துறைமுகம், பலதரப்பட்ட சரக்குகளை ஒரே இடத்தில் இறக்கவும் ஏற்றவும் வசதிகொண்ட புதிய முனையத்தை நேற்று அறிமுகம் செய்தது. துறைமுகத்திற்கு வரும் பொது சரக்குகள், கொள்கலன்கள் கொண்ட கப்பல்கள் இனி வெவ்வேறு முனையங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. இந்த மாற்றம் ஜூரோங் துறைமுகத்தில் மட்டும் செயல்படுத்தப்படும். சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தில் கொள்கலன்களில் சரக்குகள் ஏற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். புதிய முனையத்தில் சரக்குகளைக் கையாளும் செயல்திறன் 50% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல்களில் இருந்து சரக்குகளை இறக்குவதற்கும் குறைவான நேரமே தேவைப்படும். கொள்கலன்களையும் பிற சரக்குகளையும் கையாளுவதற்கு ஏற்ற சிறப்பு உபகரணங்கள் புதிய முனையத்தில் உள்ள பாரந் தூக்கிகளில் பொருத்தப்பட்டு உள்ளன.
ஜூரோங் துறைமுகம்: திறன்மிகு செயல்பாட்டுக்கு புதிய வசதிகள்
1 mins read

