ஜூரோங்கில் இருக்கும் சீனத் தோட்டத்தில் 42 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய நாட்டவராக இருக்கலாம் என நம்பப்படும் அந்தப் பெண்ணின் சடலம் சைனீஸ் கார்டனில் மிதந்துகொண்டிருந்தது. இது குறித்து அன்றைய தினம் பிற்பகல் 1.50 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தீயணைப்பு வாகனங்கள், அவசர மருத்துவ உதவி வாகனம் ஆகியவை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கரையோரத்தில் மிதந்துகொண்டிருந்த சடலத்தை அதிகாரிகள் மீட்டனர். சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் மாண்டுவிட்டதாக துணை மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 3 மணி நேரத்துக்குப் பிறகே சடலம் அடையாளம் காணப்பட்டதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' கூறியது. இயற்கைக்கு மாறானதாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த மரணத்தின் தொடர்பில் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சடலம் மிதந்த இடம் தனிமையானதாக இருந்தது என ஷின் மின் சீன நாளிதழ் குறிப்பிட்டது.
சீனத் தோட்டத்தில் மிதந்த இந்தியப் பெண்ணின் சடலம்
1 mins read

