சிங்கப்பூர் தேசிய தின அணி வகுப்பின் 50ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் பொருட்டு 'சிங்போஸ்ட்' வரும் திங்கட்கிழமை புதிய அஞ்சல்தலை தொகுப்பை வெளியிடவுள்ளது. ஒரு தொகுப்பில் ஏழு அஞ்சல் தலைகள் இருக்கும். ஒவ்வோர் அஞ்சல்தலையும் வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பைப் பிரதிபலிக்கும். 'ஃபர்ஸ்ட் லோக்கல்', 'செகண்ட் லோக்கல்', 60 காசு, 70 காசு, 90 காசு, $1.30 ஆகிய விலைப் பிரிவுகளில் அஞ்சல் தலைத் தொகுப்பு விற்பனைக்குக் கிடைக்கும்.
மேலும், ரியோ 2016 ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு 'சிங்போஸ்ட்' நான்கு வடிவமைப்புகள் அடங்கிய ஒரு சிறப்பு அஞ்சல்தலைத் தொகுப்பை நேற்று வெளியிட்டது. நீச்சல், மேசைப்பந்து, துப்பாக்கி சுடுதல், படகோட்டம் ஆகிய போட்டிகளைப் பிரதிபலிக்கும் வடிவங்க ளாக இந்தத் தொகுப்பு வெளியீடு கண்டது. 'ஃபர்ஸ்ட் லோக்கல்', 70 காசு, 90 காசு, $1.30 ஆகிய பிரிவுகளில் அஞ்சல்தலைத் தொகுப்பைப் பெறலாம். இந்த அஞ்சல்தலைத் தொகுப்புகள் அனைத்தும் எல்லா அஞ்சலகங்களிலும் சிங்கப்பூர் அஞ்சல்தலை அரும்பொருளகத்திலும் விற்பனைக்கு கிடைக்கும். www.stampdelight.com இணையத்தளத்திலும் அஞ்சல்தலை களை வாங்கிக்கொள்ளலாம்.
ரியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டி வெளியீடு காணும் அஞ்சல்தலைகள். படங்கள்: சிங்போஸ்ட்

