கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்; இணையத்தில் குறைகூறல்

கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்; இணையத்தில் குறைகூறல்

1 mins read
2c56a966-de59-4475-8e3b-f53d8943e320
-

சாலையில் கண்மூடித்தனமாக நடந்து சென்ற ஒரு பெண் மீது கார் மோதியதைத் தொடர்ந்து அவர் காயமுற்றார். பொங்கோல் வேயில் கடந்த புதன்கிழமை அச் சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவத்தின் வீடியோ படத்தை ஆண்ட்ரு இங் என்பவர் தமது ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார். சாலையின் முதல் தடத்தைக் கடந்தபோது அந்தப் பெண் கார் ஒன்றினால் மோதப்படுவது அந்த வீடியோவில் காணப்பட்டது. தமது வலப்பக்கம் வாகனங்கள் வருவதைக் கவனிக்காது சாலை யைக் கடந்தபோது அந்தப் பெண் மீது கார் ஒன்று மோதுவதையும் சுமார் ஒரு மீட்டர் தூரத்திற்கு அப்பெண் தூக்கி எறியப்படுவதை யும் அந்த வீடியோ காட்டியது.

அதனைத் தொடர்ந்து, இந்த விபத்தில் தொடர்புடைய காரின் ஓட்டுநரும் இதர வாகன ஓட்டுநர் களும் பாதசாரிகளுடன் இணைந்து அந்தப் பெண்ணுக்கு முதலுதவி செய்தனர். சிலேத்தார் நார்த் லிங்கை நோக்கிய பொங்கோல் வேயில் விபத்து நடந்ததாக தனக்கு புதன் கிழமை மாலை 6.37 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது. சம்பவத்தை விசா ரித்து வருவதாகவும் அது குறிப் பிட்டது. மயக்க நிலையில் காணப்பட்ட 60 வயதுப் பெண் ஒருவரை மீட்க ஆம்புலன்ஸ் வண்டி அனுப்பப்பட்ட தாகவும் பின்னர் அவர் கூ தெக் புவாட் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறி யது.

கார் மோதிய வேகத்தில் பெண் தூக்கி எறியப்படுவதை ஃபேஸ்புக் வீடியோ தெளிவாகக் காட்டியது. படம்: ஃபேஸ்புக்