எஸ்ஆர் நாதன் உடல்நிலை பற்றி பிரதமர் லீ தகவல்

எஸ்ஆர் நாதன் உடல்நிலை பற்றி பிரதமர் லீ தகவல்

1 mins read

சிங்கப்பூர் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் எஸ்ஆர் நாதனை பிரதமர் லீ சியன் லூங் நேற்று சென்று பார்த்தார். அது தொடர்பாக தமது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ள அவர், திரு எஸ்ஆர் நாதன் தொடர்ந்து மயங்கிய நிலையிலும் கவலைக் கிடமாகவும் இருப்பதாகக் குறிப் பிட்டார். இருப்பினும், அவரது முக்கிய உடல் அறிகுறிகள் நிலையாக உள்ளன என்றும் பிரதமர் தெரி வித்தார்.

திரு நாதனை கவனமாகப் பராமரித்து வரும் அர்ப்பணிப்பு மிக்க மருத்துவர்களுக்கும் தாதி யருக்கும் தமது நன்றியை அவர் தெரிவித்துக்கொண்டார். "திருமதி நாதனுடனும் அவர்களின் குடும்பத்தாருடனும் பேசி னேன். இது அவர்களுக்கு ஒரு கடினமான காலம். ஏராளமான பொதுமக்கள் வழங்கி வரும் ஆதரவும் உற்சாகமும் அவர் களுக்கு நிறைவைத் தந்து வரு கின்றன. நலம்பெற வேண்டி வந்த வாழ்த்துகள் அவர்களின் மனதைத் தொட்டுவிட்டன. "திரு நாதன் சிங்கப்பூருக்கு தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குப் பாடுபட்டிருக் கிறார். அவரைப் போலச் செயல் பட்டவர்கள் நிறையப் பேர் என்று சொல்லிவிட முடியாது," என்று திரு லீ தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். திரு நாதன் நலம்பெற பொது மக்கள் தங்களது பிரார்த்தனை களைத் தொடருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.2016-08-06 05:59:00 +0800