டியோ: நல்லிணக்கம் மேம்பட, சமய தீவிரவாத சித்தாந்தம் தடைபட அதிக முயற்சி தேவை

1 mins read

அமைதிக் காலத்தில் சமூகத்தின் மீட்சித்திறனையும் ஒற்றுமையையும் நாம் பலப்படுத்த வேண்டும் என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் வலியுறுத்தினார். பயங்கரவாதத் தாக்குதல் ஏதேனும் நடந்தால் அதிலிருந்து ஒரே சமூகமாக நாம் மீண்டு வர இது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூர் சமூகம் அனைத் தையும் பாதுகாக்க நம்முடைய பாதுகாப்பு அமைப்புகள் தங்களால் ஆன அனைத்தையும் செய்து வருவதாகக் குறிப்பிட்ட திரு டியோ, இதில் நாம் அனைவரும் விழிப் புடன், ஆயத்தமாக இருந்து தீவிர பங்காற்ற வேண்டும் என்றார்.

சிங்கப்பூரில் அண்மையில் சிலர் கைதானார்கள். இந்த வட் டாரத்திலும் உலகின் வேறு பகுதி களிலும் பயங்கரவாதத் தாக்குதல் கள் நடக்கின்றன. இவற்றைக் கருத்தில்கொண்டு பார்க்கையில் அனைத்து சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் சமய தீவிரவாதச் சித்தாந்தத் தைத் தடுக்கவும் இன்னும் அதிக முயற்சிகள் தேவை என்பது தெரிய வருவதாக அவர் குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பு ஒருங் கிணைப்பு அமைச்சருமான திரு டியோ, பாசிர் ரிஸ்=பொங்கோல் தேசிய நாள் விருந்து நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றினார். திரு டியோ, பாசிர் ரிஸ்= பொங்கோல் குழுத்தொகுதி அடித்தள அமைப்பு களுக்கான ஆலோசகர்.