தேசிய தின விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி

தேசிய தின விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி

2 mins read
72abfe17-9404-4443-9256-0fb501c6e8be
-

கௌரி சந்திரா

இவ்வாண்டு தேசிய தின அணி வகுப்பில் உயர்நிலைப்பள்ளி மாண வர்கள் "ஆக்கபூர்வத்தன்மை" எனும் தலைப்பில் வெவ்வேறு நிகழ்ச்சிகளைப் படைக்கின்றனர். இத்தலைப்பை ஒட்டி அவர் களின் படைப்புகள், ஆக்கபூர்வ மான மனப்போக்கு மற்றும் புதிய சிந்தனைகளைப் பார்வையாளர் களுக்கு எதிர்காலத்தைப் பற்றி எடுத்துரைக்கும் வகையில் அமைந் துள்ளன. இந்த உற்சாகமிக்க படைப்பு, 'எல்இடி' விளக்குகள் கொண்ட ஆடைகள் மேடைப் பொருட்கள் மற்றும் 'நைன்போட்' இயந்திரங்கள் கொண்டு எதிர்காலத்தைக் குறிக் கும் வகையில் அமைக்கப் பட்டு உள்ளது.

மாணவர்கள் எதிர்காலத்தைச் செதுக்கும் உயர்ந்த தன்மைமிக்க வர்களாகப் பிரதிபலிக்கப்படு கிறார்கள். விறுவிறுப்பான இசை, வண்ண விளக்குக் காட்சிகள், உற்சாகமிக்க நடன அமைப்புக்கு உறுதுணையாக அமைகின்றன. முதன்முறையாக தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கும் காமன் வெல்த் உயர்நிலைப்பள்ளி மாண வர் தர்ஷன் நாயர், 13, டெக் வாய் உயர்நிலைப்பள்ளி மாணவி கேஷவரணி சுகுமார், 13, தனது அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்கள். "அரங்கத்தில் பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் முதல்முறையாக நிகழ்ச்சியைப் படைக்கும்போது சற்று பதற்றமாக இருந்தது. ஆனால் பயிற்சிகள் மூலமாகவும் ஒத்திகைகள் மூலமாகவும் எனக்கு அது பழக்கமாகிவிட்டது. "நாங்கள் நடனத்துடன் மின் விளக்கு, மனித மூளை, அணு போன்ற அமைப்புகளை 'எல்இடி' விளக்குகள் பொருத்தப்பட்ட ஆடைகள் மூலம் செய்கிறோம். என் பெற்றோர் எனது படைப்பைக் கண்டு பெருமிதம் கொண்டார் கள். மேலும் பல புகைப்படங்கள் எடுத்தார்கள்," என்றார் தர்ஷன்.

வெவ்வேறு பள்ளி மாணவர் கள் சார்ந்த ஹிப் ஹாப் நடனக் குழுதான் Academy of Nutz. 'எல்இடி' விளக்குகள் கொண்ட ஆடைகள் அணிந்து ஹிப் ஹாப் நடனத்தை அவர்கள் படைக்கிறார்கள். "மேடைக்குச் சென்றதும் எங்கள் ஆடைகளில் உள்ள விளக்குகள் வெவ்வேறு வண் ணங்களில் பிரகாசிக்கும். அது எனக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது. நடனம் தொடங்கிய வுடன் என்னை மறந்து நான் ஆடினேன். "ஐந்து மாதம் கடுமையாகப் பயிற்சி செய்து இந்த நடனத்தைப் படைக்கிறோம். தேசிய தின அணிவகுப்பில் பங்குபெறுவதில் நான் பெரு மகிழ்ச்சிகொள் கிறேன்," என்று உற்சாகத்துடன் குறிப்பிட்டார் கேஷவரணி. தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்பதை ஒரு வாழ்நாள் வாய்ப்பாகக் கருதும் இந்த இரண்டு மாணவர்கள், தங்களது பெற்றோர் மற்றும் நண்பர்களின் ஆதரவோடு தேசிய தினத்தன்று தேசிய விளையாட்டரங்கில் தங்கள் திறனை வெளிப்படுத்தத் தயாராக உள்ளனர்.