விளையாட்டு மூலம் நட்புறவு

விளையாட்டு மூலம் நட்புறவு

1 mins read
a78997aa-6243-4de1-b873-9c405c67bea9
-

உள்ளூர் இளையர்களையும் வெளிநாட்டு ஊழியர்களையும் ஒன்றிணைத்த புதிய சமூக விளையாட்டு நிகழ்ச்சியில் நேற்று 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். துவாஸ் வியூ வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியும் ஸ்போர்ட்கேர்ஸ் அறநிறு வனமும் இணைந்து இந்த நிகழ்ச் சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. சிங்கப்பூரர்களும் வெளிநாட்டு ஊழியர்களும் நட்புணர்வை வளர்த்துக்கொண்டு அதே சமயம் வித்தியாசமான விதத்தில் சிங்கப்பூரின் தேசிய தினத்தைக் கொண்டாடும் ஒரு நூதன முயற்சி யாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "பலதரப்பட்ட இனங்கள், சமயங்கள் வாழும் துடிப்புமிக்க சிங்கப்பூரில் நமது வெளிநாட்டு நண்பர்கள் உட்பட அனைவரையும் ஒரு சமூகமாக குறிப்பாக விளை யாட்டு மூலம் ஒன்றிணைத்து தேசிய தினத்தைக் கொண்டாடு வது உகந்ததாக அமைந்தது," என்றார் ஸ்போர்ட்கேர்ஸ் சிங்கப்பூர் அமைப்பின் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் திரு தோ பூன் யி.

துவாஸ் வியூ தங்கும் விடுதியில் நேற்று காலை நடந்த இந்த நிகழ்சசியின்போது வெளி நாட்டு ஊழியர்களும் இளையர் களும் குழுக்களாகப் பிரிக்கப் பட்டனர். அவர்கள் 2 மணி நேரத்தில் 29 குழு விளையாட்டுகளையும் சவால்களையும் முடிக்கவேண்டும். 'சப்தே', 'சொப்ஸ்டிக்ஸ்' போன்ற உள்ளூர் விளையாட்டு களையும் ஊழியர்களும் இளை யரும் ஒன்றாக விளையாடி மகிழ்ந்தனர். 'கெட் ஆக்டிவ்' அமைப்பின் கீழ் நடத்தப்பட்ட இந்த சமூக விளையாட்டு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி பங்கேற் பாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

வெளிநாட்டு ஊழியர்களும் உள்ளூர் இளையர்களும் நேற்றைய கேளிக்கை நிகழ்ச்சியில் உள்ளூர் விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்