முதல் இயந்திர உணவகம் செங்காங்கில் திறப்பு

முதல் இயந்திர உணவகம் செங்காங்கில் திறப்பு

1 mins read
b64730e0-dcc6-404e-80d3-cb7fe77b9af0
-

செங்காங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புப் பேட்டையில் பலவகை உணவை, பானத்தைச் சுடச்சுட 24 மணி நேரமும் வழங் கும் இயந்திர உணவகம் நேற்று திறக்கப்பட்டது. ஆங்கர்வெல் டிரைவ், புளோக் 320சி=யின் வெற்றுத் தளத்தில் அந்த இயந்திரம் அமைக்கப் பட்டிருக்கிறது. துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் நேற்று அந்த இயந்திரத்தைத் தொடங்கி வைத்து, அதிலிருந்து உணவை வாங்கி உண்டார். ஜேஆர் வென்டிங் நிறுவனம் ஆங்கர்வெல் வென்ட்கஃபே என்ற அந்த இயந்திர உணவ கத்தை நடத்துகிறது. அங்குள்ள இரண்டு இயந்திரங்கள் மூன்று நிமிடங்களில் சுடச்சுட உணவை வழங்குகின்றன.

மேற்கத்திய உணவு, உள்ளூர் உணவு உட்பட 30 வகை உணவுகளை அவற்றில் பெறலாம். விலை $3.50 முதல் $5 வரை. பின்னர் பயன்படுத்துவதற்கு உணவுகளை யும் அதிலிருந்து வாங்கிக்கொள்ளலாம். மற்றோர் இயந்திரம் புதி தாகப் பிழிந்து ஆரஞ்ச் பானத்தை தருகிறது. சுடச்சுட பானங்களை யும் அதிலிருந்து பெறலாம்.

துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் நேற்று இயந்திர உணவகத்தை திறந்துவைத்தார். இத்தகைய முதலாவது இயந்திரம் இதுதான். இந்த உணவகத்திலிருந்து உணவு, பானத்தை வாங்கி அங்குள்ள சாப்பாட்டு மேசையில் வைத்து திரு தர்மன் உண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்