தோ பாயோவில் இருக்கும் ஸ்டோர்ஹப் நிறுவனத்திற்குச் சொந்தமான பொருள் காப்பறைக் கட்டடத்தில் சனிக்கிழமை இரவு தீ மூண்டது. அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று ஊடகத்திடம் சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை தெரிவித்தது. எண் 615 தோ பாயோ லோரோங் 4, என்ற முகவரியில் உள்ள அந்தக் கட்டடத்தில் தீ மூண்டதாக தனக்கு இரவு 10 மணிக்குத் தகவல் வந்ததாக அந்தப் படை குறிப்பிட்டது. தீயை அணைக்க பல தீய ணப்பு வாகனங்களையும் ஆதரவு வாகனங்களையும் தற்காப்புப் படை அனுப்பியது. இதற்கிடையே, அந்தக் கட்டடத்தின் 6வது மாடியில் இருக்கும் மூன்று அறைகளில் தீ மூண்டதாக லியான்ஹ வான்பாவ் சீன நாளி தழ் தெரிவித்தது. அந்தத் தோ பாயோ கட்டடத்தில் பொருள் காப்பறைகள் 300 இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. தீ விபத்துக் கான காரணம் குறித்து புலன் விசாரணை நடக்கிறது.
இந்தக் கட்டடத்தின் 6வது மாடியில் மூன்று காப்பறைகளில் தீ மூண்டது. படம்: லியான்ஹ வாபாவ்

