கௌரி சந்திரா
இவ்வாண்டு தேசிய தின அணி வகுப்பின் சாரணியர் பிரிவில் சங்காட் சாங்கி உயர்நிலைப் பள்ளியைப் பிரதிநிதிக்கும் ஸ்டெஃப்னி கெசையா ரூபென்ஸ், 14, மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். தேசிய தின அணி வகுப்பில் பங்கேற்பது இதுதான் இவருக்கு முதல் அனுபவம். "முதல்முறை விளையாட்டரங்கிற்குள் நுழைந்தபோது பார்வையாளர்கள் மிகவும் உற்சாகமாக எங்களை வரவேற்றனர். பார்வையாளர்களுக்கு இடையே அணிவகுத்துச் செல்வது சற்று பதற்றமாக இருந்தாலும் எனக்கு புதிய அனுபவமாகவும் அமைந்தது," என்றார் ஸ்டெஃப்னி. அணிவகுப்பில் நன்றாகச் செய்ய அவரும் சக மாணவர்களும் கடும் பயிற்சி மேற்கொண்டனர். முதலில் கடினமாக இருந்த பயிற்சிகள், நாளடைவில் சுலபமாக மாறின. நன்றாகச் செய்ய வேண்டும் என்ற உற் சாகம் ஸ்டெஃப்னிக்கு ஓர் ஊக்குவிப்பாக அமைந்துள்ளது.
தேசிய தின அணிவகுப்பில் பங்குபெறும் வாய்ப்பை பெருமை யாகக் கருதும் இவர், தனது சக சாரணியர்களைப் போல் ஒத் திகைகளுடன் பள்ளிப் பாடங் களையும் சமாளிக்க தமது நேரத்தைக் கவனமாக நிர்வகித்து வந்துள்ளார். "சனிக்கிழமைகளில் ஒத்தி கைகளும் பயிற்சிகளும் இருப்ப தால் என்னால் குடும்பத்துடன் நேரம் செலவிடமுடிவதில்லை. மேலும் நான் வீட்டுப்பாடங்களை யும் செய்யவேண்டும். பள்ளிப் பாடங்களைச் சமாளிக்க நான் கால அட்டவணையைத் தயாரித் துக்கொண்டேன்," என்று குறிப் பிட்டார் ஸ்டெஃபெனி.
இவ்வாண்டு முதல் முறையாக தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கும் மாணவர் சன்ஸ்கார் குப்தா, மாணவி ஸ்டெஃப்னி கெசையா ரூபென்ஸ்.

