எம்இஎஸ் நிறுவனத்தின் தேசிய நாள் கொண்டாட்டம்

எம்இஎஸ் நிறுவனத்தின் தேசிய நாள் கொண்டாட்டம்

1 mins read
0311ee7e-a1e5-4818-b1e1-61bb22ffbb01
-

சிறிய நடுத்­தர நிறு­வ­ன­மான 'மினி என்வை­ரன்­மண்ட் சர்­வீ­சஸ்' (எம்­இ­எஸ்) தனது ஊழி­யர்­களு­டன் தேசிய தினப் பற்­று ­றுதி நிகழ்ச்­சியை நேற்று நடத்­தி­யது. முன்னாள் நாடா­ளு­மன்ற நாயகர் அப்­துல்லா தர்முகி, தமிழ் முரசின் தலைவர் திரு எஸ் சந்­தி­ர­தாஸ் இரு­வ­ரும் சிறப்பு விருந்­தினர்­க­ளா­கக் கலந்­து­ கொண்டனர். நிகழ்ச்­சி­யில் எம்­இ­எஸ் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்வாக அதி காரி திரு ஜலீலும் ஊழி­யர்­களும் தேசிய கீதத்தைப் பாடி, உறு­தி­மொழி எடுத்­து­க்கொண்டு தேசிய தினப் பாடல்­கள் பாடினர்.

முதன்முறையாக இவ்­வி­ழா­வுக்கு ஏற்பாடு செய்­தி­ருந்தது எம்­இ­எஸ் நிறு­வ­னம். 24 நான்கு மணி நேரமும் நிறு­வ­னம் செயல்­படு­வ­தால் பல இனத்தைச் சேர்ந்த அனைத்து ஊழி­யர்­களுக்கும் கூட ஒரு நல்ல வாய்ப்­பாக இது அமைந்த­தாக கூறினார் எம்­இ­எஸ் நிறு­ வ­னத்­தின் தகவல் தொடர்பு இயக்­கு­நர் திரு யூசோஃப் லதீஃப்.

முதல்முறையாக நடந்த எம்இஎஸ் நிறுவனம் தேசிய நாள் கொண்டாட்டம். செய்தி, படம்: திமத்தி டேவிட்