பக்கவாத பாதிப்பில் இருந்து மீண்டு உடல்நலம் தேறி வரும் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தேசிய நாள் அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியா மைக்கு மன்னிப்புக் கோரியுள்ளார். புதிய கிருமித்தொற்று எது வும் ஏற்பட்டுவிடக்கூடும் என்பது தான் அதற்குக் காரணம் என்று திரு ஹெங் விளக்கமளித்துள் ளார். "மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். நான் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த போது எனக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது," என்று தமது ஃபேஸ்புக் பதிவில் அமைச் சர் ஹெங் குறிப்பிட்டுள்ளார்.
"இப்போது நன்றாக இருப் பதாக உணர்கிறேன். ஆயினும், நிதியமைச்சு, எதிர்காலப் பொரு ளியலுக்கான குழு ஆகியவற் றிடம் இருந்து கோப்புகளைப் பார்த்து வருகிறேன். நுரையீரல் பாதிப்பிலிருந்து முழுவதும் விடு பட சிறிது காலம் எடுக்கும் என் றும் புதிய கிருமித்தொற்று அதற்குப் பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்," என்று அவர் கூறியுள்ளார். தேசிய தின அணிவகுப்பை தொலைக்காட்சி வழியாகப் பார்க் கும்போது உடலை வளைத்து உடற்பயிற்சியில் தாம் ஈடுபடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

