அமைச்சர்களின் தேசிய தின நினைவுகள்

அமைச்சர்களின் தேசிய தின நினைவுகள்

2 mins read
9832839d-7b19-42cf-941c-a856a22c2255
-

சுதந்திரம் அடைந்து 50 ஆண்டு களில் உலக நாடுகள் வியக்கும் வண்ணம் பெரும் வளர்ச்சி கண்ட சிங்கப்பூர் அடுத்த 50 ஆண்டு களிலும் அமைதியும் செழுமையும் பெற்று மிகச் சிறந்த நாடாகத் திகழ முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது. இந்த நேரத்தில் நாட்டை முன் னோக்கி எடுத்துச் செல்லும் வகையில் ஊக்கமளித்து, நம்பிக் கையூட்டும் விதத்திலும் நெஞ்சை விட்டு அகலாத நமது முன்னோடி களின் கடும் உழைப்பை நினைவு கூரும் விதத்திலும் பல கருத்து களை அமைச்சர்கள் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பதி விட்டுள்ளனர். ஒவ்வொரு தேசிய தின அணி வகுப்பும் ஒவ்வொரு விதத்தில் மறக்கமுடியாத ஒன்றாகத் திகழ் கிறது என்று பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டுள்ளார்.

"இந்த ஆண்டு அணிவகுப்பை நாம் எதிர்பார்த்திருக்கும் நேரத் தில், இன்றைய நிலையை நாம் எப்படி எட்டினோம் என்பதையும் நாம் நினைவுகூருவோம் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி, நம்மால் முடிந்த அளவு சிறப்பாகச் செய்து, நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லும் புதிய வழி களைக் கண்டறிவதைத் தொடரும் பட்சத்தில், ஒவ்வோர் ஆண்டும் தேசிய தினத்தன்று 'மாஜுலா சிங்கப்பூரா' எனப் பெருமையுடன் நாம் சேர்ந்து பாடலாம்," என்று தமது ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.

டெக் கீ தொகுதியில் நேற்றுக் காலை நடைபெற்ற தேசிய தினப் பற்றுறுதிச் சடங்கில், பிரதமரும் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பின ருமான திரு லீ சியன் லூங் சிறுவர்களுடன் சேர்ந்து நாட்டின் பிறந்தநாள் கேக்கை வெட்டுகிறார். அவருடன் திருமதி லீ, டெக் கீ தொகுதி அடித்தள அமைப்புகளின் இரண்டாம் ஆலோசகர்களான திரு இயோ டுன் சியா, டாக்டர் எஸ். வாசு ஆகியோரும் உள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்