தியோங் பாருவில் கலவரம்: ஐவர் கைது

தியோங் பாருவில் கலவரம்: ஐவர் கைது

1 mins read

தியோங் பாரு பியோ கிரசெண்ட்டில் சென்ற ஞாயிற்றுக் கிழமை கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைதானவர்கள் 17 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்ட வர்கள் என்று போலிஸ் தெரிவித்தது. தனது 30 வயது கணவரை ஆடவர்கள் சிலர் தாக்கிய தாக அவரது மனைவி போலிஸில் ஞாயிறு இரவு புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட தங்ளின் போலிஸ் அதிகாரிகள் இரண்டு மணி நேரத்துக்குள் சந்தேக நபர்கள் நால்வரை பியோ கிரசெண்ட்டில் கைது செய்தனர். ஐந்தாவது நபர் மறுநாள் புக்கிட் பாத்தோக்கில் கைதானார். தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அந்த ஆடவரைத் தாக்கியதாக போலிசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணை தொடர்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் ஒவ்வொ ருவருக்கும் 7 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.