நீதிமன்ற அவமதிப்புச் சட்டங்கள் பற்றிய மசோதா: தாமதப்படுத்த நாடாளுமன்றத்தில் மனு

நீதிமன்ற அவமதிப்புச் சட்டங்கள் பற்றிய மசோதா: தாமதப்படுத்த நாடாளுமன்றத்தில் மனு

1 mins read

நீதிமன்ற அவமதிப்புச் சட்டங்கள் பற்றிய மசோதா ஒன்று நிறைவேறு வதைத் தாமதப்படுத்த வேண்டும் என்று ஒரு குழுவினர் விரும்பு கிறார்கள். நியமன நாடாளுமன்ற உறுப் பினர் கோக் ஹெங் லியுன், அவர் களின் சார்பில் நாடாளுமன்றத்திடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக் கிறார். பொதுநல விவகாரங்களைப் பற்றி நியாயமான முறையில் விவா திப்பதை அந்த மசோதா கட்டுப் படுத்திவிடக்கூடும் என்று அந்தக் குழுவினர் தெரிவிக்கிறார்கள். நீதி நிர்வாக (பாதுகாப்பு) மசோதா என்ற அந்த மசோதாவை நாடாளுமன்ற பொறுக்குக் குழு ஒன்றிடம் அனுப்பிவைக்க வேண் டும் என்று அந்த மனு கேட்டுக் கொள்கிறது.

அந்த மசோதாவின் அம்சங்கள் பற்றியும் அது ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்தும் பெரிய அளவில் பொதுமக்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் அந்த மனு கேட்டுக்கொள்கிறது. அந்த மனுவில் 249 சிங்கப்பூரர்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள். ஆறு நாட்கள் நடந்து, இந்த மாதம் 9ஆம் தேதியுடன் முடிவ டைந்த கையெழுத்து இயக்கத்தில் அவர்கள் மனுவில் கையெழுத்திட் டனர். இதற்கிடையே, புதிய மசோதா பற்றி கருத்துத் தெரிவித்த சட்ட அமைச்சு, தான் வழக்கறிஞர்கள், குடிமைச் சமூக அமைப்புகள் போன்ற முக்கியமானவர்களுடன் கலந்து பேசி அந்த மசோதாவை உருவாக்கியிருப்பதாகக் குறிப்பிட்டது.