சில்லறை வர்த்தகத் துறை மேம்பாடு அடையவேண்டும்

சில்லறை வர்த்தகத் துறை மேம்பாடு அடையவேண்டும்

1 mins read

மின்னியல் வர்த்தகம் போன்றவை சில்லறை வர்த்தகத் துறையில் 'சுவாரஸ்யமான மேம்பாடுகளில்' ஒன்று. இதுபோன்ற மேம்பாடுகளைப் பயன்படுத்தத் தவறும் நிறுவனங்கள் வளர்ச்சியில் பின்தங்கி விடுகின்றன என்று மனித வளத் துணை அமைச்சர் டியோ செர் லக் தெரிவித்துள்ளார். சில்லறை வர்த்தக நிறுவனங்களின் உற்பத்தித் திறனைப் பெருக்கும் முயற்சியின் ஒரு பகு தியாக சிங்கப்பூர் உற்பத்தித் திறன் மையமும் போஸ்டன் ஆலோசனைக் குழுமமும் நேற்று புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டன.

அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு டியோ, மேற்கண்டவாறு கூறி னார். இந்த உடன்பாட்டின் மூலம் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு உற்பத்தித் திறனைப் பெருக்கும் உத்திகள் கற்றுக்கொ டுக்கப்படும். தொழிலாளர் பற்றாக் குறை, வாடகைச் செலவுகள் போன்ற பிரச்சினைகளால் அவதி யுறும் சில்லறை வர்த்தகர்களுக்கு இது போன்ற உத்திகள் கைகொடுக்கும் என்பதால், சிறிய ஊழியர் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு உற்பத்தியை எப்படி பெருக்குவது என்று வர்த்தகர்கள் அறிந்துகொள்வார்கள் என்றும் அமைச்சர் கருத்துரைத்தார்.