வாகனம் ஓட்டும்போது சட்டத்தை மீறாதீர்

வாகனம் ஓட்டும்போது சட்டத்தை மீறாதீர்

1 mins read
dfc47adb-aab3-4d64-b735-b3448da88728
-

சிங்கப்பூர் சாலைகளில் வாக னத்தை ஓட்டிச்செல்லும்போது எந்த வகையிலும் சட்டத்தை மீறிச் செல்லாதீர்கள். போக்குவரத்து போலிசின் கருஞ்சட்டைக் காவலர் கள் உங்கள் மீது எப்போதும் கண் வைத்திருக்கிறார்கள் என்பதை அலட்சியப்படுத்திவிடாதீர்கள். சாலைகளில் வாகனங்களை ஓட்டுவோர் செய்கின்ற பொதுவான குற்றச்செயல்களை அந்தக் காவ லர்கள் தங்களுக்கிடையில் பகிர்ந்துகொண்டு செயல்படுகிறார் கள் என்பதைக் கவனத்தில் வைத் துக்கொள்ளுங்கள். கருஞ்சட்டைக் காலவர்கள் கடந்த ஜூன் மாதம் முதல் சாலை களில் சுற்றுக்காவலில் ஈடுபட்டு வருகிறார்கள். வாகனங்களை ஓட் டிச் செல்லும்போது கைபேசிகளில் பேசுவது, கனரக வாகனங்கள் அளவுக்கு அதிக வேகத்தில் செல் வது, இடது பக்கத்தில் செல்லத் தவறிவிடுவது, மூர்க்கத்தனமாக வாகனத்தை ஓட்டிச்செல்வது, இவை அந்தக் காவலர்கள் சாலை களில் கண்டுள்ள பொதுவான குற்றச்செயல்களில் சிலவாகும்.

போக்குவரத்து போலிஸ் திங்கட்கிழமை அன்று ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவேற்றியது. கருஞ்சட்டைக் காவலர்கள் குற்றச்செயல்களை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என் பதை அந்தக் காணொளி காட்டி யது. அனுமதிக்கப்பட்டதைவிட வேகமாக, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிச்சென்ற ஒருவரை கருஞ்சட்டைக் காவலர்கள் விரட் டிப் பிடிப்பதை அந்தக் காணொளி காட்டியது. இரண்டு நிமிடம் ஓடக்கூடிய அந்தப் படம் 300,000 தடவைக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது. அது 7,200 தடவை பகிர்ந்துகொள்ளப் பட்டுள்ளது.