போராளிகளின் கைரேகை உள்ளிட்ட 'பயோமெட்ரிக்' தகவல்களைப் பரிமாறிக்கொள்வது, தீவிரவாதமயமாதலைத் தடுப்பதற்கான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது ஆகிய இரண்டு அம்சங்கள் குறித்து சிங்கப்பூர், மலேசியத் தலைவர்கள் கலந்துரையாடி உள்ளனர். பாலியில் நேற்று நடைபெற்ற பயங்கரவாதத்துக்கு எதிரான அனைத்துலகக் கூட்டத்திற்கு இடையே மலேசிய துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சரு மான டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமாடியுடன் இருதரப்புக் கூட்டம் ஒன்றில் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கலந்துரையாடினார்.
தென்கிழக்கு ஆசியாவில் நிலவும் பயங்கரவாத நிலை குறித்து விவாதித்த அவர்கள், மலேசியா, இந்தோனீசியா, இதர அண்டை நாடுகள் ஆகியவற்றின் பாதுகாப்பு, புலனாய்வுத் துறை அமைப்புகளுக்கிடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பேசினர். சிங்கப்பூரைக் குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த ஆறு பேரை இந்தோனீசிய அதிகாரிகள் சென்ற வாரம் பாத்தாமில் கைது செய்ததன் தொடர்பில் இந்த விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச் சின் அறிக்கை தெரிவித்தது. இந்தோனீசியாவின் அரசியல், சட்டம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் மென்கோ விரான்டோவிடம் உரையாடியபோது இவ்விரு அம்சங்கள் குறித்தும் அக்கறை எழுப்பினார் திரு சண்முகம்.
இந்தோனீசியாவின் அரசியல், சட்டம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் மென்கோ விரான்டோவுடன் கலந்துரையாடும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்